கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வீடு மீது கலவரக்காரர்கள் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

347

ர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வீடு மீது கலவரக்காரர்கள் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டத்தால் கர்நாடகம் கலவர பூமியாகியுள்ளது. தமிழர்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதலால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைசூரில் உள்ள முதலமைச்சர் சித்தராமைய்யாவின் வீடு மீது கலவரக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, முதலமைச்சர் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் சித்தராமையா எச்சரித்துள்ளார்.
காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் கலவரம் ஏற்பட்டுள்ளது. தமிழக பதிவெண் கொண்ட பேருந்துகள், வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா காவிரி விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக மக்கள் அமைதி காக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். டுவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ள அவர், காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.