கர்நாடக- தமிழக எல்லையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெறும் போராட்டங்களால் ஓசூரில் தமிழக பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

324

கர்நாடக- தமிழக எல்லையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெறும் போராட்டங்களால் ஓசூரில் தமிழக பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்திற்கு உடனடியாக 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வீதம் 10 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் எதிரொலியாக கர்நாடக- தமிழக எல்லையில் கன்னட அமைப்பினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருவதால் தொடர்ந்து மூன்றாவது நாளாக தமிழகத்தில் இருந்து கர்நாடகம் செல்லும் 300 க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஓசூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


ஈரோட்டில் இருந்து கர்நாடகாவிற்கு 4-வது நாளாக அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதை கண்டித்து, கர்நாடகாவில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், தமிழகத்தில் இருந்து அந்த மாநிலத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் வழியாக கர்நாடகாவிற்கு இயக்கப்படும் தமிழக அரசு பேருந்துகள் 4-வது நாளாக எல்லைப்பகுதியில் நிறுத்தப்படுகின்றன. இதனால், கர்நாடக அரசுப்பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. கர்நாடக மாநிலம் முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால், மற்ற பேருந்துகளின் சேவையும் இன்று நள்ளிரவு முதல் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.