கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவடைந்ததையடுத்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு..!

1097

20 நாட்களாக மாற்றப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவடைந்தவுடன் அதிகரித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வதற்கான உரிமையை மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களிடம் வழங்கியதை தொடர்ந்து நாள் தோறும் கண்ணுக்கு தெரியாமல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 20 நாட்களாக பெட்ரோல் 77 ரூபாய் 43 காசுகளுக்கும், டீசல் 69 ரூபாய் 37 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. கர்நாடக தேர்தலை முன்னிட்டே எரிபொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்தாமல் இருப்பதாக குற்றம்சாட்டுக்கள் எழுந்தன.

கடந்த சனிக்கிழமை கர்நாடக தேர்தல் முடிவடைந்த நிலையில், நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை. இந்த நிலையில், இன்று 20 நாட்களுக்கு பிறகு மீண்டும் பெட்ரோல் விலை 18 காசுகள் அதிகரித்து 77 ரூபாய் 61 காசுகளாகவும், டீசல் விலை 23 காசுகள் அதிகரித்து 69 ரூபாய் 79 காசுகளாகவும் உள்ளது.