கர்நாடகா காவிரி நீர் பிடிப்புகளில் பெய்து வரும் தொடர்மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

390

கர்நாடகா காவிரி நீர் பிடிப்புகளில் பெய்து வரும் தொடர்மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த சில தினங்களாக காவிரி நீர் பிடிப்புகளில் மழை பொழிவு அதிகரித்து வருவதால் கர்நாடக அணையில் நீர்மட்டம் பெருகி வருகிறது. இந்நிலையில், கர்நாடக காவேரி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர் வரத்து ஆயிரத்து 837 கன அடியில் இருந்து 2 ஆயிரத்து 220 கன அடியாக அதிகரித்துள்ளது.இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் பெருகி வருகிறது. நீர் வரத்து அதிகரித்துள்ளதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.