கர்நாடக மக்கள் கலவரத்தில் ஈடுபடாமல் அமைதி காக்க வேண்டும் என சட்டமன்ற மேலவை எதிர்கட்சித்தலைவர் ஈஸ்வரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

312

கர்நாடக மக்கள் கலவரத்தில் ஈடுபடாமல் அமைதி காக்க வேண்டும் என சட்டமன்ற மேலவை எதிர்கட்சித்தலைவர் ஈஸ்வரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சொந்த அலுவல் காரணமாக, சிவகாசிக்கு வருகை தந்த ஈஸ்வரப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு காவிரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்றார். ஆனால் தற்போது, கர்நாடகா மாநிலத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக கூறிய ஈஸ்வரப்பா, இதை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி மனுதாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறினார்.