கர்நாடகா சட்டபேரவை தேர்தல் முடிவுகள் இன்று மதியம் 12 மணிக்குள் தெரிந்துவிடும்..!

628

கர்நாடகா சட்டபேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த 12ஆம் தேதி கர்நாடகா சட்டபேரவைக்கான வாக்கு பதிவு நடைபெற்றது.2 தொகுதிகளை தவிர்த்து 222 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 72.13 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடியும், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே தேர்தலுக்கு பிந்தய கருத்து கணிப்பில் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும் என்றும் கிங் மேக்கராக மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி இருப்பார் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் 38 மையங்களிலும் காலை 8 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
கர்நாடகாவில் யார் ஆட்சியை பிடிக்க போகிறார்கள் என்ற தகவல் மதியம் 12 மணிக்குள் தெரிந்துவிடும். இதனால் இந்த தேர்தல் முடிவுகளை அறிய நாடே ஆவலுடன் காத்துள்ளது.