கர்நாடக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து தேர்தல் மன்னன் பத்மராஜன் போட்டி ..!

679

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து தேர்தல் மன்னன் பத்மராஜன், வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன். கின்னஸ் சாதனையில் இடம்பெறும் நோக்கத்துடன் தொடர்ந்து அனைத்து தேர்தல்களிலும் அவர் போட்டியிட்டு வருகிறார். மே 12ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.மைசூர் மாவட்டம் சாமுண்டீஸ்வரி சட்டசபை தொகுதியில் முதல்வர் சித்தராமையா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிட பத்மராஜன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இது அவர் போட்டியிடும் 191வது தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காவிரி நீர் பிரச்னையை மனதில் கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்ததாக பத்மராஜன் கூறியுள்ளார்.