கர்நாடகாவிற்கு செல்லும் பேருந்துகள் இரண்டாம் நாளாக தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.

319

கர்நாடகாவிற்கு செல்லும் பேருந்துகள் இரண்டாம் நாளாக தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, நள்ளிரவில் கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளநிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில கன்னட அமைப்பினரும், விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி நீர் திறப்பு விவகாரத்தால் கர்நாடகத்தில் பதற்றம் நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்குச் செல்ல வேண்டிய அரசுப் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வந்த தமிழக அரசுப் பேருந்துகள் ஒசூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்குச் செல்லும் 500-க்கும் அதிகமான அரசுப் பேருந்துகள் ஒசூரிலேயே திருப்பி விடப்பட்டுள்ளன.
இதனிடையே, மேட்டூர், பாலாறு வழியாக கர்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலை, கொள்ளேகால், மைசூரு ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் இரண்டாவது நாளாக இயக்கப்படவில்லை. அதனால், பேருந்துகள் மேட்டூர் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோல, ஈரோடு மாவட்டம் சத்யமங்கலத்திலும் கர்நாடகா செல்லும் அரசு பேருந்துகள் இரண்டாவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், 3 நாள்கள் தொடர் விடுமுறையில் தமிழகத்துக்கு வந்த கர்நாடக மாநிலத்தில் பணியில் இருக்கும் தமிழர்கள் மீண்டும் திரும்பிச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.