கர்நாடகா, தமிழகம் இடையிலான பேருந்து போக்குவரத்து நிறுத்தம். ஓசூர் எல்லையில் வாகனங்கள் திருப்பி விடப்படுவதை அடுத்து பயணிகள் அவதி.

425

கர்நாடகாவில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, தமிழகத்தில் இருந்து செல்லும் பேருந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது.
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததை அடுத்து, இருமாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து முடங்கியது. இதனையடுத்து 6 நாட்களுக்கு பின் இருமாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து தொடங்கியது. இந்நிலையில், கர்நாடகாவில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஓசூர் அருகே தமிழக பேருந்தின் மீது கல் வீசப்பட்டுள்ளது. இதனையடுத்து, நேற்றிரவு முதல் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு பேருந்து போக்குவரத்து மீண்டும் தடைபட்டது. தமிழக பேருந்துகள் அனைத்தும் ஓசூருடன் திருப்பி விடப்பட்டன. இதன் காரணமாக இரு மாநில எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.