பரபரப்பான அரசியல் சூழலில், நாளை கூடுகிறது கர்நாடக சட்டசபை..!

92

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது.

கர்நாடகாவில், 13 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் மற்றும் 3 மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏ-க்கள் பதவி விலக முடிவு செய்துள்ள நிலையில், அவர்களுடைய ராஜினாமா குறித்து முடிவெடுக்க கால அவகாசம் வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் ரமேஷ் குமார் முறையீடு செய்துள்ளார்.

இதனிடையே, காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதால், குமாரசாமி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மாநில பாஜக வலியுறுத்தியுள்ளது. மேலும், இதுதொடர்பாக, மாநில ஆளுனரை சந்தித்து எடியூரப்பா ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுபோன்ற பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது. இதனையடுத்து, நாளைய அமர்வில் நிதி மசோதா உள்ளிட்ட பிற விஷயங்களை நிறைவேற்ற காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும் என அக்கட்சியின் கொறடா கணேஷ் ஹக்கேரி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், நாளை அமர்வில் கலந்துக்கொள்ளாத எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் பத்து பேரும் விதான் சௌதாவில் சபாநாயகர் ரமேஷ்குமாரை சந்தித்துள்ளனர்.