கர்நாடகாவில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக தமிழக எல்லைவரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

288

கர்நாடகாவில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக தமிழக எல்லைவரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, காவிரியில் இருந்து நீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பெரும் வன்முறை வெடித்தது. கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மீதும், தமிழக வணிக வளாகங்கள் மீதும் கன்னட வெறியாளர்கள் தாக்குதல் நடத்தினர். மேலும் தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதையடுத்து இருமாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. கர்நாடகா செல்லும் பேருந்துகள் தமிழக எல்லையான ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல கர்நாடகாவில் இருந்து வரும் பேருந்துகள் அத்திப்பள்ளி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இருமாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து 12 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.