கர்நாடக மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கக் கோரிக்கை..!

278

கர்நாடக மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கக் கோரி, எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள வடக்கு மாவட்டங்களை இணைத்து, தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்திவந்த நிலையில், தற்போது அந்தக் கோரிக்கை வலுத்துவருகிறது. அரசு சார்ந்த திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் போன்றவை வடக்கு மாவட்டங்களில் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதால், தனி மாநிலமே தீர்வு என்று கோரிக்கை விடுப்பவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி, நாளை வடக்கு மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த நிலையில், தனி மாநில கோரிக்கை வலுப்பதற்கு பாஜகவின் செயல்பாடுகள் தான் காரணம் என முதலமைச்சர் குமாரசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.