மாநில அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ராகுல் காந்தியுடன் கர்நாடகா மாநில கட்சி நிர்வாகிகள் இன்று ஆலோசனை…

319

மாநில அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் கர்நாடகா மாநில கட்சி நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்….

கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு முதலமைச்சர் பதவியுடன் சேர்த்து 12 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு துணை முதலமைச்சர் பதவியுடன் சேர்த்து 22 இடங்களும் அமைச்சரவையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ் தரப்பில் 6 இடங்களுக்கு இன்னும் அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் காலியாக உள்ள இடங்களுக்கு யாரை அமைச்சர்களாக நியமிப்பது என்பது குறித்து விவாதிப்பதற்காக கர்நாடகா காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று டெல்லி புறப்பட்டு செல்லுகின்றனர். அங்கு ராகுல் காந்தியை நேரில் சந்தித்து இதுகுறித்து ஆலோசிக்க திட்டமிட்டுள்ளனர். அப்போது கர்நாடகா அரசின் வாரிய தலைவர் பதவிகளுக்கும் காங்கிரஸ் தரப்பில் நிர்வாகிகள் நியக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.