காவிரி நதியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர இயலாது என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

144

கர்நாடக மாநிலம், பெல்லாரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தின் பெரும்பாலான அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு இல்லை என்று கூறினார். விவசாயத்திற்கு தண்ணீர் வழங்காததால், கர்நாடக விவசாயிகள் பெரும் இன்னலை சந்தித்து வருவதாகவும் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார். அணைகளில் உள்ள நீரை குடிநீர் தேவைக்காக மட்டும் பயன்படுத்தி வருவதாக கூறிய அமைச்சர் எம்.பி.பாட்டீல், கேஆர்எஸ் அணையில் உள்ள 15 டிஎம்சி தண்ணீர் குடிநீருக்கு போதுமானதாக இருக்காது என்றும் தெரிவித்தார். எனவே காவிரி நதியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர இயலாது என்று கூறிய அவர், தினமும் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்துவிடும் உச்சநீதிமன்ற உத்தரவை திருத்தக்கோரி மனு தாக்கல் செய்யவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.