காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக கர்நாடக அமைச்சரவை மற்றும் அனைத்துக்கட்சிக்கூட்டம் பெங்களுருவில் இன்று நடைபெறுகிறது.

209

காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக கர்நாடக அமைச்சரவை மற்றும் அனைத்துக்கட்சிக்கூட்டம் பெங்களுருவில் இன்று நடைபெறுகிறது.
காவிரியிலிருந்து மூன்று நாளுக்கு ஆறாயிரம் கன அடி நீர் தமிழகத்துக்கு திறக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த தவறினால் மீண்டும் கண்டனத்துக்கு உள்ளாகவேண்டிய நிலைக்கு கர்நாடகம் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து விவாதிப்பதற்காக கர்நாடக அனைத்துக்கட்சிக்கூட்டம் பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற உள்ள இந்தக்கூட்டத்தில் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சித்தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதையடுத்து, அமைச்சரவைக்கூட்டத்தை கூட்டியும் சித்தராமையா விவாதிக்க திட்டமிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் எழுந்துள்ள சட்டசிக்கல்கள், தமிழகத்துக்கு தண்ணீர் தரலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து இன்று நடைபெற உள்ள கர்நாடக அனைத்துக்கட்சிக்கூட்டம் மற்றும் அமைச்சரவைக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.