2021ல் டிசம்பர் மாதத்தில் சந்திராயன் – 2 விண்கலம் ஏவப்படும் – இஸ்ரோ தலைவர் சிவன்

126

2021ல் டிசம்பர் மாதத்தில் சந்திராயன் – 2 விண்கலம் மூலம் நிலவுக்கு இந்தியரை அனுப்புவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சந்திராயன் 2 விண்கலம் ஏவுவதற்கான திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது விளக்கமாக எடுத்துக்கூறினார். நிலவுக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், ககன்யான் திட்டத்திற்கு 10 ஆயிரம் கோடி ருபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சந்திரயான் 2 திட்டத்திற்கான உதிரி பாகங்கள் அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளன. 2021ல் டிசம்பர் நிலவுக்கு இந்தியரை அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.