தலைமறைவாக இருந்த கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணனை கோவையில் போலீசார் கைது செய்துள்ளனர்.

382

தலைமறைவாக இருந்த கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணனை கோவையில் போலீசார் கைது செய்துள்ளனர்.
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி கர்ணன், கடந்த 12 ஆம் தேதி ஓய்வு பெற்றார். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் புகார்களை கூறியதால் இவர் மீது சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனால் தலைமறைவான அவரை கைது செய்ய கொல்கத்தா போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர். கர்ணன் தமிழகத்தில் பதுங்கியிருக்கலாம் என்ற கோணத்தில், மேற்கு வங்க ஏடிஜிபி திவேதி தலைமையிலான போலீசார் சென்னையில் கர்ணனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த கர்ணன் கோவை தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த கொல்கத்தா போலீசார், நீதிபதி கர்ணனை கைது செய்தனர்.