திமுக தலைவர் கருணாநிதி பூரண நலம் பெற்றும் விரைவில் வீடு திரும்புவார் என அரசியல் கட்சித்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

125

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன், மு.க.அழகிரி, ஆ.ராசா உள்ளிட்டோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். இதேபோன்று, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் கே.வி. தங்கபாலு, குமரிஅனந்தன்,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன், விவசாயிகள் சங்கத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.