சிறைத்தண்டைனையை திரும்பப் பெறக்கோரி நீதிபதி கர்ணன் தாக்கல் செய்த மனுவை நிராகரித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

235

சிறைத்தண்டைனையை திரும்பப் பெறக்கோரி நீதிபதி கர்ணன் தாக்கல் செய்த மனுவை நிராகரித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறிவந்த கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, அவரை கைது செய்யும் முயற்சியில் கொல்கத்தா போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நீதிபதி கர்ணன் இருக்கும் இடம் இதுவரை தெரியவில்லை. இதனிடையே, தனக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை திரும்பப் பெறக்கோரி நீதிபதி கர்ணன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில், கர்ணனின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. இறுதி உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதால் வழக்கில் மேல் முறையீடுக்கு வாய்ப்பில்லை என்றும் உச்சநீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.