கர்நாடக அரசுக்கு மத்திய அரசு கெடு..!

142

காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களின் பட்டியலை நாளைக்குள் ஒப்படைக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்து அரசாணையை அரசிதழில் வெளியிட்டுள்ளது. இந்த ஆணையத்துக்கான தலைவரை மத்திய அரசு நியமிக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில், உறுப்பினர்களுக்கான பரிந்துரையை மாநில அரசுகள் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்கள் உறுப்பினர்களுக்கான பெயர்களை மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளன.

ஆனால், கர்நாடக அரசு இதுவரை எந்த பரிந்துரையும் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிலையில், கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், நாளைக்குள் மேலாண்மை ஆணையத்தில் இடம் பெறும் உறுப்பினர்களின் பட்டியலை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.