அணை பிரச்சனையை நட்பு ரீதியாக பேசி தீர்த்துக் கொள்ளலாம் – நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார்

128

மேகதாது அணை பிரச்சனையை நட்பு ரீதியாக பேசி தீர்த்துக் கொள்ளலாம் என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் மழைக்காலத்தில் மேட்டூரிலிருந்து உபரிநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கலாம் என்று கூறியுள்ளார். மேகதாது அணை பிரச்சனையை நட்புரீதியாக பேசி தீர்க்கவே கர்நாடக அரசு விரும்புவதாகவும் அவர் தெரிலிவித்துள்ளார்.
மேகதாது அணை குறித்து தமிழக அரசும், மக்களும் தவறாக புரிந்து கொண்டுள்ளதாகவும் எனவே தவறான கருத்துக்களை களைய தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பேச விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் தமிழக முதலமைச்சர் பழனிசாமி, சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.