வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆய்வு..!

852

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆய்வு செய்தார்.

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணைகள் நிரம்பியதை அடுத்து அணையில் இருந்து சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் நேற்று முன் தினம் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் பல்வேறு இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நீர்ப்பாசன திட்டத்தை மேம்படுத்த ஓய்வு பெற்ற ஆறு பொறியாளர்களை தமிழக அரசு நியமித்துள்ளதாகத் தெரிவித்தார்.