கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி நிலைத்து நீடிக்கும் – முன்னாள் முதல்வர் சித்தராமையா

70

கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி நிலைத்து நீடிக்கும் என முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தர்மஸ்தலா உஜிரியில் உள்ள ஆயுர்வேத இயற்கை மருத்துவ மையத்தில் சேர்ந்து கடந்த 12 நாட்களாக புத்துணர்ச்சி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பெங்களூரு திரும்பிய அவர், காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி நிலைத்து நீடிக்கும் என்றும், இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்று தெரிவித்தார்.

நான் தனிப்பட்ட முறையில் ஒருவருடன் பேசுவதை வீடியோ எடுத்து வெளியிடுவது தவறு என்றும் தெரிவித்தார். அண்மையில் சித்தராமையா தனது ஆதரவாளர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசிய வீடியோ காட்சிகள் செய்தி தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய தேவை இல்லை என்றும், இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என்றும் அவர் கூறிய உரையாடல் வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.