கர்நாடகாவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்..!

181

காவிரி மேலாண்மை ஆணைய விவகாரம் குறித்து ஆலோசிக்க கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் அம்மாநில அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெறுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் கிடுக்குபிடியை தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனிடையே நீண்ட இழுபறிக்கு பிறகு கர்நாடகாவுக்கான உறுப்பினர்களாக ராகேஷ்சிங், பிரசன்னா ஆகியோரை அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி நியமனம் செய்தார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கர்நாடகா அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11 மணிக்கு பெங்களூருவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அம்மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். அப்போது காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா தரப்பில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.