கருட சேவையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

914

கருட சேவையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவ திருவிழா கடந்த சனிக்கிழமை, கொடியேற்றத்துடன் துவங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. 5ம் நாளான இன்று, பெருமாள், மோகினி அலங்காரத்தில் நர்த்தன கிருஷ்ணருடன் எழுந்தருளினார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அனுப்பிய பட்டாடை அணிந்து, மாலைகள் கிளிகளை தரித்து கொண்டு மோகினியாக பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை இன்று மாலை நடைபெறுகிறது. ராஜ மன்னாராக எழுந்தருளும் பெருமாள் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கருட சேவையை ஓட்டி, பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர்.