காரைக்கால் பெண் தாதா எழிலரசி கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியபோது, போலீஸாரால் கைது..!

540

கொலை செய்வதற்காக, புதுச்சேரி சொகுசு ஓட்டலில் கூட்டாளிகளுடன் சதித்திட்டம் தீட்டிய காரைக்கால் பெண் தாதா எழிலரசியை போலீஸார் கைது செய்தனர். கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம், காரைக்கால் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தை பார்வையிடச் சென்ற புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்குமாரை, பெண் தாதா எழிலரசி, தனது கூட்டாளிகளுடன், அரிவாளால் வெட்டி, வெடிகுண்டுகளை வீசி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட எழிலரசி உள்ளிட்ட பலர் கடந்த 30 நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்த நிலையில், கொலை செய்ய ஓட்டலில் கூட்டாளிகளுடன் சதித்திட்டம் தீட்டியதாக, பெண் தாதா எழிலரசி உட்பட 14 பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.