கார்கில் போர் வெற்றி கொண்டாட்டம் – நினைவு சின்னங்களில் ராணுவ வீரர்களுக்கு மரியாதை

389

கார்கில் போர் வெற்றி கொண்டாட்டத்தையொட்டி போர் நினைவு சின்னங்களில் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

காஷ்மீர் எல்லையில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் படையினர் ஆக்கிரமித்தனர். அப்போது பாகிஸ்தான் படையினர் மீது இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி விரட்டினர். இந்த சண்டையின் போது, வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி கார்கில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.இதனையொட்டி காஷ்மீரில் உள்ள த்ரோஸ் போர் நினைவிடத்தில் வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக ராணுவ வீரர்கள் மோட்டார் வாகனங்களில் அணிவகுப்பு நடத்தினர். இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள அமர்ஜவான் ஜோதியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராணுவ தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.