உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அணைகளின் நீர்இருப்பு குறித்து காவிரி தொழில்நுட்பக்குழு இரண்டாவது நாளாக ஆய்வு செய்து வருகிறது.

178

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அணைகளின் நீர்இருப்பு குறித்து காவிரி தொழில்நுட்பக்குழு இரண்டாவது நாளாக ஆய்வு செய்து வருகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி பாசனப்பகுதிகள் மற்றும் அணைகளை ஆய்வு செய்வதற்காக மத்திய நீர்வளத்துறை ஆணையர் ஜி. எஸ். ஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு கர்நாடக அணைகள், ஏரிகள், நீர்நிலைகளில் உள்ள நீர்இருப்பு குறித்து நேற்று ஆய்வு செய்தது. இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் கே.ஆர்.எஸ்., கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளில் ஆய்வு செய்து வருகின்றனர். இதையடுத்து, காவிரி தொழில்நுட்பக்குழுவினர் தமிழகம் வர உள்ளனர். மேட்டூர் அணை மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் அவர்கள் நாளை ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர், இரண்டு மாநிலங்களின் உள்ள நீர் இருப்பு குறித்து வரும் 17 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய காவிரி தொழில்நுட்பக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.