திருடப்பட்ட ரூ.2.6 கோடி பறிமுதல்..!

248

காரைக்குடியில் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த மூவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த சுப்ரமணி, தன்னுடைய உறவினர் சிட்டாள் என்பவரிடம் 40 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து வைத்திருந்தார். இதை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டதாக டி.எஸ்.பி-யிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் சுப்ரமணியின் கார் ஓட்டுனர் நாராயணனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, பணத்தை திருடியதை ஒப்புக்கொண்ட நாராயணன், அதனை விருதுநகரை சேர்ந்த செல்வராஜ் என்பவரிடம் கொடுத்திருப்பதாக தெரிவித்தார்.

பின்னர் அந்த பணம் இராமநாதபுரத்தை சேர்ந்த சேகர் என்பவரிடம் கைமாறியதை அறிந்த போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் இருந்து 2 கோடியே 60 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. மூவரையும் கைது செய்த போலீசார், கைப்பற்றப்பட்டது ஹவாலா பணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.