காரைக்குடியில் போலி மருத்துவம் செய்த மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர்…!

449

காரைக்குடியில் போலி மருத்துவம் செய்த மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடியில் சிஎம்சி சாலை பகுதியை சேர்ந்தவர் அருள்சாமி. இவர் ஹோமியோபதி படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் செய்துவந்ததாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், அருள்சாமி, அவரது உதவியாளரையும் கைது செய்தனர். இதேபோல் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே சுப்பையா என்பவர் ராணுவ மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இதையடுத்து அவர் அப்பகுதியில் மருத்துவமனை அமைத்து மருத்துவம் பார்த்துவந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட மூவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.