தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் திருச்சி அணியை வீழ்த்தி காரைக்குடி அணி வெற்றி..!

387

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி காரைக்குடி காளை அணி திரில் வெற்றி பெற்றது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 17-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் திருச்சி வாரியர்ஸ் அணியும், காரைக்குடி காளை அணியும் மோதின. டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. காரைக்குடி அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் திருச்சி வாரியர்ஸ் திணறியது. இறுதியில், 19.5 ஓவரில் 114 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது திருச்சி அணி.

இதையடுத்து, 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை களமிறங்கியது. முதலில் வீரர்கள் நிதானமாக ஆடினாலும் அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இறுதியில் காரைக்குடி அணி 19.5 ஓவரில் 9 விக்கெட்டுக்கு இலக்கை எட்டியது. இதனால் திருச்சி வாரியர்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி காரைக்குடி காளை அணி திரில் வெற்றி பெற்றது.