காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம்..!

185

காரைக்காலில் மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக காரைக்கால் அம்மையாரின் திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது..

காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் விதமாக, காரைக்காலில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான விழா மாப்பிளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வாக காரைக்கால் அம்மையாரின் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, திருமண கோலத்தில் சுவாமியுடன் மேடையில் எழுந்தருளிய காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் ஒலிக்க திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கல்யாண வைபவத்தை கண்டுகளித்தனர்.