ஈரோடு அருகே பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் கபடி போட்டியில் சேலம் மாநகராட்சி பள்ளி அணி பரிசு கோப்பையை தட்டி சென்றது.

245

ஈரோடு அருகே பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் கபடி போட்டியில் சேலம் மாநகராட்சி பள்ளி அணி பரிசு கோப்பையை தட்டி சென்றது.

ஈரோடு அருகே கொங்கு கலைக்கல்லூரியில் ஆண்டுதோறும் கொங்கு கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாநில அளவிலான இப்போட்டிகளில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்று வருகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான போட்டிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கோவை, திண்டுக்கல், தேனி, நாமக்கல், சேலம், திருப்பூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இதில் கைப்பந்து, கால் பந்து, கூடைப்பந்து, கபடி போட்டிகள் நடத்தப்பட்டன. கூடைப்பந்து இறுதிப்போட்டியில் திண்டுக்கல் விளையாட்டு விடுதி அணியை, 17க்கு 11 என்ற புள்ளி கணக்கில் ஈரோடு பாரதி வித்யா பவன் அணி வென்றது.