நான்காம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை..!

198

கன்னியாகுமரி அருகே நான்காம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளப்புரம் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். அவர் சில மாதங்களாக சோர்வுடன் இருப்பதை கவனித்த பெற்றோர் அவரிடம் அதுகுறித்து விசாரித்துள்ளனர். அப்போது மாணவி தன்னுடன் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள் இரண்டு பேர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து மாணவியை கேரளாவில் உள்ள மனநல சிகிச்சை மையத்தில் சேர்த்த பெற்றோர் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது குழித்துறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து இரண்டு மாணவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.