கன்னியாகுமரி மாவட்டத்தில் 3500 மின்பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்-மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி!

279

கன்னியாகுமரி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3 ஆயிரத்து ஐநூறு மின் பணியாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர்கள் தங்கமணி, உதயகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர்கள், பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர். மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் 3 ஆயிரத்து ஐநூறு மின்பணியாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், போக்குவரத்து துண்டிக்கப்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
இதே போல் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை கண்டுப்பிடிக்கும் பணியில் அதிநவீன கப்பல்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளில் இருந்து வெளிமாநிலங்களுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்டு, அரசு செலவில் சொந்த ஊருக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பிக்கை தெரிவித்தார்.