மத்திய அரசை கண்டித்து இன்று நடைபெறும் போராட்டத்தில் மீனவர்களும் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து தேசிய அளவில் நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து குளச்சல், கடியப்பட்டணம், முட்டம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு கட்டுமர மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் மீன் வர்த்தகம் கடும் பாதிப்புக்குள்ளானது.
இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் விசைப்படகு மீனவ உரிமைகள் சங்கமும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்கச் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.