கன்னியாகுமரியில் சுழன்றியடிக்கும் ஒகி புயலால் மின்சாரம் மற்றும் தொலை தொடர்பு சேவை முற்றிலும் முடக்கம் !

342

கன்னியாகுமரியில் சுழன்றியடிக்கும் ஒகி புயலால் மின்சாரம் மற்றும் தொலை தொடர்பு சேவை முற்றிலும் முடக்கப்படடுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒகி புயலாக உருவாகியுள்ளது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் சூறாவளி காற்று வீசி வருகிறது. குமரிக்கு தெற்கே 60 கிலோ மீட்டர் தொலைவில் ஓகி புயல் நிலை கொண்டுள்ளது. காற்றின் வேகம் காரணமாக 500 மரங்களும், 900 மின் கம்பங்களும் சாய்ந்தன. இதனால் தொலைதொடர்பு சேவை, போக்குவரத்து சேவை மற்றும் மின்சார சேவையும் முற்றிலும் முடங்கிலும் உள்ளது.
இந்த புயலில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்தனர். 250 அரசு ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மழை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் அரக்கோணத்திலிருந்து 70 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழு கன்னியாகுமரி விரைந்துள்ளது. இதனிடையே பலத்த சூறாவளி காற்று வீசுவதால் மக்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவான் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே கன்னியாகுமரியிலிருந்து 200க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் நடுக்கடலில் தவிக்கின்றனர். தேங்காய்ப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயமாகி உள்ளனர். தொடர் மழை காரணமாக கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் அனைத்து விரைவு ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சூறை காற்று காரணமாக தூத்துக்குடி சென்னை இடையே விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளன. ice_screenshot_20171130-173745