கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் தெரிசனங்கோப்பு, ஞாலம், கீரிப்பாறை உட்பட பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதிகளை தமிழக அரசின் சிறப்பு அதிகாரி ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநரே ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். மேலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.

இதேபோல் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள சுருளி அருவியில் தொடர் மழையின் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.