கன்னியாகுமரி அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து திருடர்கள் 55 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்..!

325

கன்னியாகுமரி அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் 55 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் சுவாமியார்மடத்தில் உள்ள தெற்றை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்தாஸ். வெளிநாட்டில் வேலை செய்து வரும் இவர், தனது குடும்பத்துடன் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் மாடிப்பகுதியில் உள்ள பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த 55 சவரன் நகைகளை திருடிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மோகன்தாஸ் திருவட்டார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து கொள்ளை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.