பதவியில் இருக்கும் அமைச்சர்கள் கவனமாக பேச வேண்டும் – நடிகர் ரஜினிகாந்த்

162

7 பேர் விடுதலை குறித்து செய்தியாளர்கள் தெளிவு இல்லாமல் கேட்டதால், அவர்கள் யார் என்று கேள்வி எழுப்பியதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
#RajiniKanth #Minister

சென்னை போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பரோலில் வந்த பேரறிவாளனுக்கு ஆறுதல் கூறியதாக கூறினார். மேலும், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் வாடும் 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார். பாஜக ஆபத்தனா கட்சியா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறிய அவர், இதுகுறித்து தற்போது கருத்து கூற விரும்பவில்லை என குறிப்பிட்டார். பாஜக பலசாலியான கட்சியா என்ற கேள்விக்கு, 10 பேரை எதிர்கொள்ளும் ஒருவனே பலசாலி என ரஜினிகாந்த் விளக்கம் அளித்தார்.