பா.ஜ.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜனநாயகம் கேள்விக் குறியாகிவிடும் !

89

மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், நாட்டின் ஜனநாயகம் கேள்விக் குறியாகிவிடும் என எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடியில், தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த கனிமொழி, வரும் மக்களவைத் தேர்தலை போர்க்களமாக நினைத்து போராட வேண்டும் என கேட்டுக் கொண்டார். நாட்டில் தலித்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டிய கனிமொழி, வாக்குறுதியை நிறைவேற்றாத பா.ஜ.க., மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டின் ஜனநாயகம் கேள்விக் குறியாகிவிடும் எனவும் குறிப்பிட்டார்.