கன்னியாகுமரியில் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க சட்ராக் என்னும் ஒத்திகையில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

258

கன்னியாகுமரியில் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க சட்ராக் என்னும் ஒத்திகையில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சின்ன முட்டம் முதல் குளச்சல் வரையிலான கடலோர பகுதிகளில் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுப்பதற்காக, இந்த ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. கடலோர காவல் படையினர் மற்றும் கண்காப்பு காவல் துறையினர் இதில் ஈடுபட்டுள்ளனர். கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டி.ஐ.ஜி.சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் நடைபெற்று வரும் இந்த ஒத்திகையில் அதிவிரைவு ரோந்து படகுகளில் சென்றுள்ள வீரர்கள், அதிநவீன தொலைநோக்கிகள் மூலமாக, கடல் பகுதியில் கண்காணித்து வருகின்றனர். தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களின் ஒருபகுதியாக இந்த ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கடல் பகுதியில் சந்தேகத்துக்கு உரிய வகையில் படகுகள் தென்பட்டால் தகவல் தெரிவிக்குமாறு மீனவர்களுக்கு காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.