கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளையும், நாளை மறுநாளும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!

509

புயலால் பேரழிவை சந்தித்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளையும், நாளை மறுநாளும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்து ஒகி புயலால், கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் சூறைக் காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. கன்னியாகுமரி மாவட்டம் புயலால் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளி, கல்லூரிகளை சீரமைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில், நாளையும், நாளை மறுநாளும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.