கன்னியாகுமரி அருகே ஒரு தலை காதலால் வாலிபர் ஒருவர், கல்லூரி ஆசிரியையை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

211

கன்னியாகுமரி அருகே ஒரு தலை காதலால் வாலிபர் ஒருவர், கல்லூரி ஆசிரியையை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்த்தாண்டம் அருகே சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் அனு ஹென்சி. இவர், நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். புத்தாண்டிற்காக தேவாலயத்தில் பிரார்த்தனை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது, வாலிபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு அனுஹென்சியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அனஹென்சியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், அங்கிருந்து தப்பமுயன்ற வாலிபரை பிடித்து நித்திரவிளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த ஜாய் என்பதும், மீன்பிடி தொழில் செய்துவரும் அவர் சிறுவயது முதலே அனுஹென்சியை ஒரு தலையாக காதலித்து வந்ததும் தெரியவந்தது.