கேரள மாநிலத்தின் ஓணம் பண்டிகை மொழி, இன வேறுபாடு இல்லாமல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

260

கேரள மாநிலத்தின் ஓணம் பண்டிகை மொழி, இன வேறுபாடு இல்லாமல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகையாகும். கேரள மக்கள் தங்கள் அன்புக்குரிய அரசனான மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நிகழ்ச்சியே, ஓணம் பண்டிகையின் சிறப்பாகும். இந்த பண்டிகை கேரள மாநிலத்தில் அறுவடை பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது. மேலும், மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தின் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

இந்த ஓணம் பண்டிகையானது கேரள மாநில மக்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்களும் இணைந்து மொழிவேறுபாடு இல்லாமல் கொண்டாடி வருகின்றனர். மகாபலி அரசனை வரவேற்கும் விதமாக, ஒவ்வொருவரும் தங்கள் வீட்டின் முன்பு மிகப்பெரிய அத்தப்பூ என்ற பூக்கோலம் இட்டு கொண்டாடுகின்றனர்
பெண்கள் தூய வெண்ணிற ஆடைகள் அணிந்து பாட்டுப்பாடி, நடனம் ஆடி ஓணத்தை கொண்டாடுகிறார்கள். இளம் பெண்கள் ஆடும் இந்த நடனம் கைகொட்டுக்களி என்றும், திருவாதிரை நடனம் என்றும் அழைக்கப்படுகிறது.
தற்போது, ஓணம் பண்டிகையானது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் மலையாள மொழி பேசும் மாணவர்கள் மட்டுமல்லாது, தமிழ் பேசும் மாணவர்களும் சாதி, மொழி, இன வேறுபாடு இல்லாமல் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.