கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளூவர் சிலைக்கு இடையே 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபாலம் அமைக்கப்படுவதற்கு குமரி அனந்தன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

209

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளூவர் சிலைக்கு இடையே 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபாலம் அமைக்கப்படுவதற்கு குமரி அனந்தன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி கடல் பகுதியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளூவர் சிலை ஆகியவை அமைந்துள்ளன. விவேகானந்தர் நினைவு மண்டம் வரை மட்டுமே படகு போக்குவரத்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கும், திருவள்ளுவர் பாறைக்கும் இடையே இணைப்பு பாலம் அமைக்க வேண்டும் என்று தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன. இந்த நிலையில் மத்திய அரசின் சுற்றுலாத்துறை சார்பில் திருவள்ளூவர் சிலையை பார்வையிடும் வகையில், கடலின் நடுவே 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 95 மீட்டர் நீளத்திற்கு புதிய நடைபாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த அறிவிப்புக்கு காந்தி பேரவைத் தலைவர் குமரி அனந்தன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.