கன்னியாகுமரி தாணுமாலய சுவாமி கோயிலில் உள்ள அபூர்வ மூலிகை ஓவியங்கள் புதுப்பிக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளதையடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

286

கன்னியாகுமரி தாணுமாலய சுவாமி கோயிலில் உள்ள அபூர்வ மூலிகை ஓவியங்கள் புதுப்பிக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளதையடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற தாணுமாலயன் சுவாமி கோயில். 150 வருடம் பழமை வாய்ந்த இந்த கோயிலில் 133 அடி உயரமுள்ள 7 அடுக்குகளைக் கொண்ட ராஜ கோபுரம் உள்ளது. இதன் உட்புரத்தில் ராமாயணம், மகாபாரதக் கதைகள் மற்றும் பழங்கால மக்களின் வாழ்க்கை முறை உள்ளிட்டவைகளை சித்தரிக்கும் மூலிகை ஓவியங்கள் உள்ளன. காலப்போக்கில், ராஜ கோபுரத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இந்த ஓவியங்கள் சிதிலம் அடைந்து காணப்பட்டன. இவைகளை புதுப்பிக்க தமிழக அரசு சார்பில், 81 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது புதுப்பிக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளதையடுத்து அப்பகுதி மக்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இயற்கையாக கிடைக்கும் பச்சிலைகள், வேம்புபசை, நீலாம்பரி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு வண்ணக் கலவைகள் தயாரிக்கப்பட்டு ஓவியங்கள் புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.