கன்னியாகுமரி, விவேகானந்தர் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சென்றுவர, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலவசமாக படகில் பயணம் செய்யலாம் என பூம்புகார் படகு நிர்வாகம் அறிவித்துள்ளது.

301

கன்னியாகுமரி, விவேகானந்தர் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சென்றுவர, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலவசமாக படகில் பயணம் செய்யலாம் என பூம்புகார் படகு நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் உலக முழுவதிலும் இருந்து வருகை தருகின்றனர். இதனிடையே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளதால், நாடு முழுவதும் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு குமரிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு, அடுத்த அறிவிப்பு வரும் வரை கட்டணம் எதுவும் வசூலிக்கவேண்டாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விவேகானந்தர் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சென்றுவர, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கட்டணம் எதுவும் செலுத்தாமல் இலவசமாக படகில் பயணம் செய்யலாம் என்று பூம்புகார் படகு நிர்வாகம் தெரிவித்துள்ளது.