கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வாழைகள் சூறைக்காற்றில் முறிந்து விழுந்து சேதமடைந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

227

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டவிளை மற்றும் அமராவதி உட்பட பல்வேறு பகுதிகளிலும் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கோட்டவிளையில் விவசாயிகள் பயிரிட்டிருந்த ஆயிரகணக்கான வாழைகள் சூறை காற்று மற்றும் மழையில் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன. கடன் வாங்கி பயிரிட்ட விவசாயிகள் பெரிய நஷ்டத்தை சந்தித்து உள்ளதால், வேதனை அடைந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீட்டை வழங்கிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.