வீட்டின் சுவர் இடிந்து விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!

174

கன்னியாகுமரி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி பகுதியை சேர்ந்தவர் உமையூரான் பிள்ளை. இவருக்கு சந்திரிகா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். மண் சுவரினால் கட்டப்பட்ட இவர்களது வீடு மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டது. இதனால் ஒரு பகுதி வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டுவதற்காக ஊமையூரான் அஸ்திவாரம் தோண்டி இருந்தார். இந்த நிலையில், இரவு பலவீனமான வீட்டின் மறு பகுதி சுவர், தூங்கிக்கொண்டிருந்த ஊமையூரான் மற்றும் அவரது மனைவியின் மீது விழுந்தது. இதில், சந்திரிகா பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த உமையூரான் பிள்ளை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.